விதிமுறைகளை மீறிய 67ஆட்டோக்களுக்கு அபராதம் 11 ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரையில் விதிமுறைகளை மீறியதாக 11 ஆட்டோக்கள் பறிமுதல், 67 ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து போலீஸார் அதிரடி

Update: 2022-05-06 06:00 GMT

பைல் படம்

மதுரையில் விதிமீறிய ஆட்டோக்களுக்கு போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனர்.11 ஆட்டோக்களை பறி முதல் செய்தனர்.

மதுரை நகரின் பல்வேறு இடங்களில் போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி தலைமையில் உதவி கமிஷனர்கள் திருமலைக்குமார், மாரியப்பன் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிங்காரவேலு, செல்வகுமார், சித்ரா, ஆய்வாளர்கள் கமலா, சக்திவேல், முரளி, அனிதா சோதனையிட்டனர்.

அதில் உரிமம் பெறாதவை 2 ஆட்டோக்கள், தகுதிச்சான்று இல்லாதது 10, மீட்டர் இல்லாதது 19, சரியான இருக்கை பொருத்தாதது 6, காப்பீடு இல்லாதது 4, போக்குவரத்து விதி மீறலுக்காக 11, ஓட்டுனர் உரிமம் இல்லாதவை 16 என்பது போன்ற விதிமீறல்களுக்கான சோதனையில் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தற்பொழுது ஆட்டோ ஓட்டுனர்கள் முறையாக ஆவணங்கள் ,ஓட்டுனர உரிமம், அளவுக்கு மீறிய பாரம் ஏற்றுதல் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும். என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News