பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 500 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 500 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்;
மதுரை தல்லாகுளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர். சரவணன் தலைமையில் நேற்று மாநில அரசுக்கு எதிராக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் டாக்டர் சரவணன் உட்பட 500 பேர் மீது விதிகளை மீறி பொது இடத்தில் கூடியது உள்பட மூன்று பிரிவுகளில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.