திருடுபோன தங்க நகை 48 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸார்

மதுரை செல்போன் கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளை அடித்த 45 சவரன் நகை மீட்பு .குற்றவாளிகள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.

Update: 2022-03-15 17:00 GMT

மதுரையில் திருடுபோன 45 பவுன்  தங்க நகைகளை 48 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

மதுரையில் திருடுபோன 45  பவுன் தங்க நகைகளை 48 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியை சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் விமலநாதன் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீரோவை உடைத்து 45  பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது . இச்சம்பவம் குறித்து திலகர் திடல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயதான பெண்மணி மற்றும் சுந்தரேசன் என்பவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து திருடுபோன நகைகளை மீட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொள்ளை சம்பவம் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலை உள்ளது.

போலீஸார் பொதுமக்களுக்கு அனைத்து வீதிகளிலும் கேமராக்கள் பொருத்தி பாதுகாத்துக் கொள்ளவும், மேலும் போலீஸ் அவசர எண் அழைத்து புகார் கொடுக்கவும், தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் முகம் தெரியாத வியாபாரிகளிடம் பொருள்கள் வாங்குவதை தவிர்க்கவும் ,ஆண் துணை இல்லாமல் செல்லும் பெண்கள் அதிக நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்கவும், போலீஸ் இலவச செயலி எஸ் ஓ எஸ் அப்ளிகேஷனை பதிவுசெய்து குற்ற சம்பவங்கள் நடக்கும் விதத்தில் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்  என காவல்துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News