விபத்தில் இறந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் விருப்பம்

சாலை விபத்தில் இறந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இருப்பதாக அவரது பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-03 16:30 GMT

மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக்ராஜா (வயது23). இவர் தனது நண்பர் விக்னேஷ்குமாருடன் சம்பவத்தன்று பைக்கில் திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். பைக்கை விக்னேஷ்குமார் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் பரளிபுதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில்பலத்த காயமடைந்த 2 பேரும் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக்ராஜா இன்று காலை உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கார்த்திக்ராஜாவின் உடல் மதுரைராஜாஜி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

உடல் உறுப்புகள் தானம் பெற விரும்புவோர் மதுரை அரசு மருத்துவனையை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடல் உறுப்புகள் தானத்தில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News