தேசிய புலனாய்வு முகமை அதிரடி பரிசு அறிவிப்பு
மதுரை அண்ணாநகர் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை அறிவித்த அதிரடி பரிசை அதிகாரிகள். போஸ்டர் அடித்து ஒட்டினர்;
குற்றவாளிகள் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரொக்கப்பரிசு அளிப்பதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் சுவரொட்டி ஒட்டி தேசிய புலனாய்வு முகமை.
திருச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரபல முகம் பிரமுகரான ராமலிங்கம் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த முகமது அலி, ஜின்னா உட்பட 5 பேரை தேடி வருகிறார்கள் காவல்துறையினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.
இவர்களைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு சுவரொட்டி மதுரை அண்ணாநகர், கேகே நகர் உள்ளிட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.