நாகர்கோவில் அதிவிரைவு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே
நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை எழும்பூர் வரை உள்ள கோபால்சாமி நகர் ரயில் பெட்டி பராமரிப்பு மற்றும் ரயில்பாதை பணிகள் நடைபெற இருப்பதால் நாகர்கோவில் முதல் சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதன்படி ஜனவரி 20 முதல் மார்ச் 3 வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் (12667) மற்றும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 25 வரை வெள்ளிக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் வாராந்திர ரயில் தனது (12667) ஆகியவை தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் .
சென்னை எழும்பூர் அதிவிரைவு வாராந்திர ரயில் தனது (12668) ஆகியவை தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.