மதுரை மீனாட்சியம்மன் கோவில் பக்தர்களுக்காக நடமாடும் கட்டணமில்லா கழிப்பறை

மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டணமில்லா கழிப்பறைஊர்தியை பெட்ரோல்பங்க் நிர்வாகி வழங்கல்;

Update: 2022-02-05 17:15 GMT

பைல் படம்

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக பெட்ரோல் வங்கி நிறுவனம் மூலம் நிறுவன சமூகப்பொறுப்பு திட்டத்தின் கீழ் நடமாடும் கட்டணமில்லா கழிப்பறை ஒன்று பக்தர்களின் உபயோகத்திற்காக  நன்கொடையாக  வழங்கப்பட்டது.

நடமாடும் கட்டணமில்லா கழிப்பறை தற்போது சீரமைத்து புதுப்பிக்கப்பட்டு, திருக்கோயிலுக்கு சொந்தமான மதுரை எல்லீஸ் நகர் வாகன பாதுகாப்பு மையத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. நிகழ்வின்,  பெட்ரோல் பங்க் மதுரை மண்டலமேலாளர்  கே.நடராஜன், மதுரை பிரதான கிளை மேலாளர் ஆரோக்கிய ரீகன், வங்கி ஊழியர்கள் மற்றும் திருக்கோவில் உதவி கோட்ட பொறியாளர் முன்பு வழங்கப்பட்டது. இதில,  கோவில் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News