மதுரை டாஸ்மாக் மது பாட்டிலில் தண்ணீர் கலப்படம்: 4 பேர் கைது
மதுரை பகுதி டாஸ்மாக் குடோனில் ஒயின்ஷாப்புகளுக்கு எடுத்துச்செல்லும் பாட்டில்களில் மதுவை எடுத்து தண்ணீரில் கலந்து இறக்குமதி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட 4 பேர்.
மதுரை சரக டிஐஜி பொன்னி அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர் நாகநாதன் தலைமையிலான போலீசார் மணலூர் டாஸ்மாக் கிடங்கிலிருந்து விராதனூர் ஒயின்ஷாப் கடைக்கு கொண்டு செல்லும் டாஸ்மாக் மது பாட்டில்களிலிருந்து சுமார் 50 மில்லி அளவில் சீல்களை உடைத்து 15 லிட்டர் அளவில் தினமும் சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
மேலும் பாட்டில் மது குறைவிற்கு பாட்டில்களில் அள்வான தண்ணீரை கலந்து விடுகின்றனர். இச்சம்பவம் டிஐஜி பொன்னிக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, குற்ற சம்பவங்களில் கொட்டாரத்தை சேர்ந்த ஆண்டார், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த ஆனந்த், சதீஷ்குமார், மற்றும் டேவிட் துரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து 4 பேர் மீதும் சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் மது குடிபப்போர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.