மதுரை: கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினர் 1207 பேருக்கு நிவாரணம்
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் . உயிரிழந்த 1207 குடும்பத்தினருக்கு 6 கோடியே 35 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது
கொரோனா தோற்றால் உயிரிழந்த குடும்பத்தினர் 1,207 பேருக்கு நிவாரணம் தல்லாகுளம் பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தகவல்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: மதுரை மாவட்டத்தில் கொரனா தோற்றால் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரருக்கு 1207 பேருக்கு 6 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.நிதி பெற தகுதியுடையோர் உரிய ஆவணங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .தொற்று நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் பெரும் தொற்றினால் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரர்களுக்கு அரசு இழப்பீடு உதவித்தொகைக்கு இதுவரை 2457 நபர்கள் இணையவழி வலைதளத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர் .அதில் 1207 கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 6 கோடியே 35 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் 291 விண்ணப்பங்கள் சிறப்பு குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த பட்டு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் என முடிவு செய்து அத்தொகை வழங்கப்பட்டுள்ளது.இதில் 73 விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் என கண்டறியப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 33 விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்ட ரீதியான பிரச்சனை காரணமாக தொகை வழங்கப்பட இயலாத நிலையில் உள்ளது.மேலும் இதில் 174 விண்ணப்பங்கள் முகவரி முழுமையாக இல்லாத காரணத்தினாலும் மனுவில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொள்ள இயலாத ஒரு நிலையிலும் உள்ளது.மேலும் எஞ்சிய விண்ணப்பங்கள் மருத்துவ ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப் பட்டிருக்கவில்லை. இவை குறித்து மருத்துவ ஆவண சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நபர்கள் குறித்த விவரங்கள்( http://madurai.nic.in/ )என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான ஆவணம் மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்று போன்ற முழுமையான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து நிதி உதவியினை பெறலாம்.