மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்தியபிரதேச முதலமைச்சர் சுவாமி தரிசனம்
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்வர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்;
மதுரை உலகப் புகழ் பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் .
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்சௌகான் வருகையையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னதாக கோவிலுக்கு வந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து முதல்வருக்கு சாமி உற்சவம் மூலவரை காண்பிக்கப்பட்டது. சிவராஜ் சிங் சவுகான் பயபக்தியுடன் அன்னை மீனாட்சியை வணங்கி சென்றார்.இதில், பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.