மதுரையில் ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு: போலீசார் விசாரணை
ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வீட்டு வேலை செய்ய வந்த பெண் மீது சந்தேகம் காவல் நிலையத்தில் புகார்.;
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஏக்னஸ் சில்வியா வயது (54). இவர் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டரை பவுன் தங்க நகை திருடு போனது. நகை திருடு போனதை அறிந்த ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஜோதிலட்சுமி வயது (36) இவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வீட்டுக்கு வேலைக்கு வந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெளி நபர்கள் திருடிச் சென்றுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.