மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி: காவலர் சஸ்பெண்ட்.
மதுரை மத்தியசிறை கைதியை தற்கொலை முயற்சித்த சம்பவத்தில் சிறை காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது
சிறை கைதியை தற்கொலைக்கு தூண்டியதாக சிறை காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது .
மதுரை மத்திய சிறையில் இருந்த முகமது உசேன் என்பவர் கடந்த மே 27 ஆம் தேதி சிறை அறையை மாற்றியதை கண்டித்து பிளேடால் தன்னை தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .காயமடைந்த அவர் , மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . விசாரணையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சின்னச்சாமி என்ற சிறைக் காவலர் பிளேடை கொடுத்து அறுத்துக் கொள்ள கூறியதாக விசாரணைக் கைதி வாக்குமூலம் கொடுத்தார் .
எனவே சிறைவாசியை தற்கொலை செய்துள்ள பிளேடு கொடுத்து உதவிய சிறை காவலர் சின்னசாமியை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து மதுரை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார் .மேலும் இதுபோல் சிறை கைதிகளுக்கு சாதகமாக செயல்படும் சிறை காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .