மதுரையில் பண மோசடி தொடர்பாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு
வெளிமாநில போலீஸார் ஒத்துழைப்பு இல்லாததால் அம்மாநிலங்களில் உள்ள குற்றவாளிகளை கைது செய்வதில் தொய்வு;
மதுரையில் பண மோசடி தொடர்பாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன வெளிமாநில போலீசார் ஒத்துழைப்பு இல்லாததால் மாநிலங்களில் குற்றவாளிகளை கைது செய்வதில் தொய்வு ஏற்படுகிறது மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு நடவடிக்கை தேவை என்கின்றனர் மதுரை மாவட்ட போலீஸார்.
முன்பெல்லாம் வங்கி அதிகாரி என கூறிய ஆன்லைன் மோசடி செய்தனர். மக்கள் சுதாரித்ததால் பேஸ்புக்கில் நமது நண்பரின் பெயரில் பிரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் கொடுத்து கடன் கேட்டு மோசடி செய்தனர். அதிலும் நம்மவர்கள் சுதாரித்தனர். தற்போது விளம்பரம் கொடுப்பவர்களை நோட்டமிட்டு மோசடி செய்ய ஆரம்பித்துள்ளனர் கடந்தவாரம் வீட்டை வாடகைக்கு விடுவது தொடர்பாக ஒருவர் விளம்பரம் செய்துள்ளார் இதனைப்பார்த்த து ஒரு பெண் அவரிடம் வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார்.அப்போது அவர், தான் ஒரு ராணுவ அதிகாரி என்னால் வந்து செல்ல முடியாது .ஆகையால் எனது வீட்டை வாடகைக்கு விடுவதற்காக நண்பர் மூலமாக வீட்டு சாவியை கொடுத்து விடுவேன். எனது கூகுள் பே மூலம் தனக்கு வீட்டுக்கான அட்வான்ஸ் தொகையை போட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பாவி பெண் அவரை கேட்டது போல் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.