மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் குட்கா பதுங்கியிருந்தவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
மதுரை மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வரிச்சூர் ஏரியாவில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றனர்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு வைத்திருந்த ராதா கிருஷ்ணன் 32/22. S/o அய்யாவு என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பண்டல்கள் சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரிக்கின்றனர்.