மதுரையில் திடீர் காய்ச்சலுக்கு பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

கிருஷ்ணாபுரம் மாணவர் ராமகிருஷ்ணன் காய்ச்சலுக்கு பலியானார். சாவில் மர்மம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை

Update: 2021-12-17 02:28 GMT

மதுரை திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி மாணவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

மதுரை  கிருஷ்ணாபுரம் 7வது தெரு விநாயகர் தெருவை சேர்ந்தவர் அழகன் மகன் ராமகிருஷ்ணன் வயது 24 இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல்களின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அவர்கள் உறவினர்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News