மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
மதுரையில் சர்வதேசத் தரத்தில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு 114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது;
மதுரையில் சர்வதேச தரத்தில் அமையும் கலைஞர் நூலகத்திற்கு ரூ. 114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நூலகம் அமைக்க ரூ 99 கோடியும், நூல்கள் வாங்க ரூ 10 கோடி ,தொழில்நுட்ப சாதனங்கள் வாங்க ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் 7 தளங்களுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த நூலகம் பொதுமக்கள் பயனடையும் வகையில் அமைய உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.