மதுரையில் பொது அறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
மதுரையில் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ம.ம.க. கட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.;
மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் 14ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு 60வது வார்டு மகபூப்பாளையம் கிளையின் ம.ம.க. சார்பில் பொது அறிவு கேள்வி பதில் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் ஏராளமான மாணவிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சரியான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு கேள்விக்கு பதில் போட்டியில் சரியான முறையில் பதில் அளித்து. மாணவர்களுக்கு மனிதநேயம் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே முகமது கவுஸ் பரிசுகள் வழங்கி மாணவர்களை கவுரவித்தனர்.