மதுரை ரயில் நிலையத்தில் ஆன்மிக சுற்றுலா ரயிலில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

லக்னோவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-26 03:59 GMT

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 55 க்கும் மேற்பட்டோர் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர்.

இவர்கள் சுற்றுலா ரயிலில் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அப்போது ஒரு ரயில் பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சப்தமன் சிங் (64), மிதிலேஸ்வரி (65) உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்துள்ளனர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை ரயில்வே மருத்துவ குழுவினர் மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ரயில்வே மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்த விசாரணையில் தீப்பிடித்ததற்கு இவர்கள் ரயிலில் கொண்டு சென்ற சிலிண்டரே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த சிலிண்டர் வெடித்ததில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. 

தேநீர் தயார் செய்வதற்காக முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ரயில் பெட்டியை பூட்டி வைத்துவிட்டு சமைத்ததே இதற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில் பெட்டியை பூட்டிக் கொண்டு இவர்கள் சமைத்ததால் தீப்பிடித்தவுடன் அவர்களால் வெளியேற முடியாமல் உடல் கருகி இறந்தனர்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு டீ குடிப்பதற்காக சிலிண்டரை திறந்துள்ளனர். அப்போதுதான் இந்த விபத்து நடந்தது. ரயில் பெட்டியை ஏன் பூட்டினார்கள் என காயமடைந்த பயணிகளிடம் கேட்ட போது பாதுகாப்பு கருதியே ரயில் பெட்டியை உள்பக்கமாக பூட்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.

எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல தடை இருக்கும் போது இவர்கள் எப்படி சிலிண்டரை கொண்டு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் சம்பவ இடத்திற்கு வருகை தருகிறார். 

Tags:    

Similar News