கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல்: ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

மதுரை மாட்டுத்தாவணியில் ஹோட்டல் உரிமையாளர் சரவணன், சுதா தம்பதியின் மகன் பிரியதர்ஷன் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல் விடுத்ததாக மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.;

Update: 2021-12-27 08:08 GMT
பைல் படம்.

மதுரை மாட்டுத்தாவணியில் சரவணன், சுதா தம்பதியினர் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இவரது மகன் பிரியதர்ஷன்  கூடுதல் வரதட்சணை கேட்டு சித்திரவதை, கொடுமை செய்வதாக மனைவி அன்ஸ்வர்யா வயது (23) போலீசில் புகாரளித்துள்ளார் . புகாரின்பேரில் மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

கடந்த 2019ல்  விழுப்புரம் ஹோட்டல் உரிமையாளர் சுப்புராமன் மகள் அன்ஸ்வர்யாவுக்கும், மதுரை ஹோட்டல் உரிமையாளர் சரவணன் மகன் பிரியதர்சனுக்கும் திருமணம் நடந்தது.

இதற்கு சீர்வரிசையாக வரதட்சனை என ரூ.1 கோடியே 44 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 1128 கிராம் தங்க வைர நகைகள் ,வெள்ளி வீட்டு உபயோக பொருட்களுடன் ரூ. 35 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளார். அன்ஸ்வர்யா தனது கணவர் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் 2 கோடிக்கு மேல் கடன் ஆகிவிட்டேன் என கடனை அடைக்க 2.50 கோடியும், சொந்தமாக வீடு வாங்கவும் பெண் வீட்டாரிடம் பணம் கேட்டதாகவும் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் கணவர் தொந்தரவு தாங்க முடியாமல் அனுசுயா விழுப்புரத்தில் வசிக்கும் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரியதர்ஷன் தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த கணவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News