மதுரையில் ஐந்தாவதாக புதிய மகளிர் காவல் நிலையம் திறப்பு

New Police Station - மதுரை மாவட்டம் ஊமச்சிகுலத்தில் புதிதாக ஐந்தாவது காவல் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.;

Update: 2022-06-02 07:00 GMT

New Police Station- மதுரை  மதுரை புறநகரில் மேலூர், உசிலம்பட்டி, சமயநல்லூர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் அனைத்து மகளிர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஊமச்சிகுளம் வட்டாரத்திலுள்ள சத்திரப்பட்டி, கள்ளந்திரி, அழகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்க நகர் பகுதியான தல்லாகுளம், புறநகர் பகுதியான மேலூர் மகளிர் காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டது.இந்நிலையில் அரசிடம் விடுத்த கோரிக்கையையடுத்து ஊமச்சிகுளத்தை மையமாக கொண்டு, புறநகர் பகுதிக்கு தனி மகளிர் காவல்நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்படி ஊமச்சிகுளம் பகுதியில் தற்காலியமாக வாடகை கட்டிடத்தில் மகளிர் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News