பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பெண் சிசு சடலம்: போலீஸார் தீவிர விசாரணை

மதுரை தெப்பக்குளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இறந்த நிலையில் பெண் சிசு மீட்கப்பட்டது

Update: 2022-04-17 08:45 GMT

மதுரை தெப்பக்குளம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள குப்பைத்தொட்டியில் சடலமாக பெண் சிசு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

மதுரை தெற்குத் தொகுதி தெப்பக்குளம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்த சில மணி நேரம் ஆன பெண் சிசு இறநத நிலையில் நள்ளிரவில் தூக்கி எறிந்து வீசி சென்றுள்ளனர் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர். தெப்பக்குளம் காவல் நிலைய போலீஸாருக்கு  தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் தெப்பக்குளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாக கிடந்த பெண் சிசுவின் உடலை கைப்பற்றி உடல்கூராய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்  பெண்சிசு தூக்கி எறிந்த குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.  இப்பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News