கைதிகளுக்கு செல்போன்- கஞ்சா வழங்கி உதவிய காவலர் 2 பேர் பணி நீக்கம்
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா வழங்கி உதவிய காவலர் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்
சிறைவாசிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சா விநியோகம் செய்த புகார் - காவலர்கள் இருவர் டிஸ்மிஸ் - சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு
மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 7பேருக்கு செல்போன் மற்றும் கஞ்சா வழங்கி உதவியதாக சிறைத்துறை காவலர்களான விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகிய இருவரை பணி நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் அதிரடி உத்தரவு
இந்த புகாரின் கீழ் ஏற்கெனவே இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவரும் டிஸ்மிஸ் ( பணியறவு) செய்து மதுரை சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. சிறைவாசிகளுக்கு கடந்த 5 மாதங்களில் செல்போனை வழங்கி 113முறை பேச வைத்துள்ளதும், தடை செய்யப்பட்ட கஞ்சா சிகரெட், குட்கா போன்ற போதைவஸ்துகளை வழங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.