முன்னாள் ராணுவத்தினர் உயிர்சான்று சமர்ப்பிக்க இறுதிநாள் நவ. 30 : மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்களது உயிர் சான்றிதழை வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்;

Update: 2021-11-21 05:15 GMT

மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அவர்களை சார்ந்த உயிர் சான்று நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து இரண்டாம் உலகப்போர் நிதி உதவி, மாதாந்திர நிதி உதவி, மற்றும் மருத்துவ நிதியுதவி ,பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்த   நவம்பர் 30ஆம் தேதிக்குள் உயிர் சார்ந்த விவரங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்வது அவசியம். அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ நிதி உதவி பெறுவோர், அதைத்தொடர்ந்து பெறுவதற்குரய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் .இது தொடர்பான விவரங்களை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News