கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய மதுரை ஆட்சியர் உத்தரவு
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய வேண்டும் என்று, ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.;
மதுரையில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்காணித்து, அவர்கள் செல்லும் இடங்களில் தடுப்பூசி செலுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை நகரம் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமம், நகர் பகுதியிலும் மக்கள் செல்லும் பொது இடங்கள் அனைத்து இடங்களிலும், முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவரையும் கண்டறிந்து, கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களிலும் கண்காணித்து, இரண்டாம் பருவ தடுப்பூசியை முறையாக செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளது.