கொரோனா நோய்தடுப்பு பணி: மதுரையில் இன்று நேர்காணலில் பங்கேற்க தயாரா?

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2022-01-07 01:15 GMT

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவித்துள்ளார். 

அதன்படி, மூன்றாம் அலை கொரோனா நோய் தொற்றும் தடுப்பு பணிகளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மட்டும் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர், துப்புரவு பணியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு,  தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணி புரியலாம்.

இதில் விருப்பம் உள்ள,  தகுதியான நபர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அலுவலகத்தில் இன்று (7ம் தேதி)  வெள்ளிக்கிழமை,  தங்களுடைய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதில்,  இரண்டாவது அலை பாதிப்பு காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.  மேலும் கொரோனா தாக்கம் அதிகமாகும் நிலையில்,  ஊரடங்கு நீடிக்கும்  பட்சத்தில்,  இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News