மருத்துவம் படிக்கும் 6 மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று
மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;
மதுரை மருத்துவக்கல்லூரியில் 6 மாணவர்களுக்கும் அங்கு பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் பல ஊர்களில் இருந்து வந்து மருத்துவ படிப்பை ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அங்கும் பயிலும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் நான்கு ஊழியர்களுக்கும் கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.இதனால் மருத்துவ கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஊழியர்களையும், மாணவர்களையும் தனிமை படுத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.