மருத்துவர் அளிக்கும் சான்றிதழை நம்ப முடியாத நிலை ஏற்படும்: உயர்நீதிமன்றம்

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்தாவிட்டால் எந்த சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும்

Update: 2021-11-20 09:00 GMT

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்தா விட்டால் மருத்துவர்கள் அளிக்கும் எந்த சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும்  என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி கூறியுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த கோபிநாத்தை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் 3 வாரம் ஜாமின் வழங்கியது. மூன்று வாரத்துக்கு பிறகு நீதிமன்றம்  விசாரணை  நடைபெறும் உத்தரவிட்டது.  அதன்படி, கோபிநாத் சரணடையவில்லை. இதனால் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .அவர் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வழக்கு முன்ஜாமீன் கேட்டு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோபிநாத் மனு தாக்கல் செய்தார். அதில் விபத்தில் சிக்கியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் நீதிமன்றத்தில் சரணடைய முடியவில்லை என்று கூறியிருந்தார் .தஞ்சாவூர் மருத்துவர் ஸ்ரீ பாலாஜி வழங்கிய மருத்துவ சான்றிதழையும் அவர் தாக்கல் செய்து இருந்தார். அந்த மருத்துவர் சான்றிதழ் மீது சந்தேகம் அடைந்து அந்த சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆராய நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மருத்துவ சான்றிதழ் போலியானது என தெரியவந்தது .இந்நிலையில் கோபிநாத்தின் முன்ஜாமின் மனு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் தரப்பில் மருத்துவர் பாலாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது என்றார். 

இதனையடுத்து நீதிபதி மருத்துவர்கள் பொய் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தா விட்டால் மருத்துவர்கள் வழங்கப்படும்எந்த சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும் .இதுபோன்ற பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கும் பழக்கத்தை அடியோடு ஒழிப்பது பொய் மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் எதிர்காலத்தில் மருத்துவர்கள் பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது மருத்துவ கவுன்சில் கடமையாகும்.

இந்த வழக்கில் மனுதாரர் மீது 14 வழக்குகள் உள்ளன 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது முன் நடத்தை பொய் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்தது போன்ற காரணங்களுக்காக அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News