உயரமான செல்போன் டவரையே 'லவட்டிய' பலே திருடர்கள்: மதுரையில் பரபரப்பு

மதுரை மகாத்மா காந்தி நகர் பகுதியில், ரூ. 29 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரையே, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.;

Update: 2022-01-08 01:45 GMT

கோப்பு படம்

மதுரை கூடல் நகர் மகாத்மா காந்தி நகர் அமராவதி நதி தெருவில், செல்போன் டவர் உள்ளது. இது, ரூபாய் இருபத்தி ஒன்பது லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில்,  இரவில் இந்த  செல்போன் மர்ப நபர்கள் கூண்டோடு திருடி சென்றுள்ளனர். உயரமான செல்போன் டவரை, சாமர்த்தியமாக சந்தேகம் வராதபடி திருடிச் சென்றனர். 

இந்த திருட்டு தொடர்பாக, செல்போன் நிறுவனத்தின்  நிர்வாக அதிகாரி,  சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த முத்து வெங்கடகிருஷ்ணன் என்பவர், கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் டவரை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

அசுர உயரம் கொண்ட, அதிக பாரம் கொண்ட செல்போன் டவரையே திருடிச் சென்ற பலே திருடர்களின் செயல்,  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News