சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசால் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவிப்பு

Update: 2021-11-21 15:15 GMT

மதுரை தமிழக அரசால் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  வெளியிட்ட  செய்திக்குறிப்பில், சமூக நீதிக்காகப் பாடுபட்ட அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது . ரூ.1 லட்சம் தொகை ,ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை கொண்டது விருதுக்குரிய நபர்கள் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்கள் .

நிகழாண்டுக்கான விருதுக்கு தகுதியுடைய நபர்கள் சமூக நீதிக்காகப் பாடுபட்ட பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் . அதில் சுயம்வரம் முழு முகவரி தொலைபேசி எண் மற்றும் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும் இந்த விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News