கத்தரிக்காய் ரூ. 100 தக்காளி ரூ. 80 விலை உயர்வு: விலை உயர்வு பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டத்தில் கிடுகிடுவென காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்
மதுரையில் இன்று தக்காளி கிலோ ரூ. 80 -க்கு விற்கப்படுகிறது. மதுரையில் கடந்த வாரம் ரூ. 75 விற்ற ஒரு கிலோ கத்தரிக்காய் நேற்று ரூ 100 ஆகவும், பிற காய்கறி விலைகள் கடந்த வாரத்தை விட ரூ. 20 வரை உயர்ந்துள்ளது மாட்டுத்தாவணி மொத்த காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் முருகன் கூறியதாவது.
மழை காரணமாக கத்தரிக்காய் உட்பட பல்வேறு காய்கறி வரத்து குறைந்துள்ளது. அந்த வகையில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 மற்றும் தக்காளி ரூ. 75 , முருங்கைக்காய் ரூ. 60 ,முட்டைக்கோஸ் 30 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பிற காய்கறி அனைத்தும் கிலோவுக்கு ரூ. 20 வரை உயர்ந்துள்ளது. மழை குறைந்தால் தான் காய்கறி வரத்து அதிகரிக்கும், விலையும் குறையும், அதுவரை இதே விலை உயர்வு நீடிக்கும் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் விலை அதிகமுள்ள காய்கறிகள் வாங்கி சமைப்பதற்கு போதுமான வருமானம் இல்லாத பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்