இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்திய பாலம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்

மதுரை நத்தம் சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படுத்திய ஜெ.எம்.சி ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி அபராதம்

Update: 2022-04-26 11:45 GMT

பைல் படம்

மதுரையில் நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் ஆகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை – செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் பிரமாண்ட பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இந்த பயங்கர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

திட்ட பொறுப்பாளர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் மதுரை மேம்பாலம் விபத்து தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்பித்தனர். அதன்படி விபத்துக்கு காரணமான ஜே.எம்.சி. ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், நடப்பாண்டில் அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News