வீரச்செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது

மதுரை மாவட்டத்தில் வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு மாநில பெண் குழந்தைகள் விருது வழங்குகிறது.;

Update: 2021-12-21 10:30 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

மதுரை வீர தீர செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக அரசு மாநில பெண் குழந்தைகள் விருது வழங்குகிறது. பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், தவிர்த்து வேறு ஏதாவது ஒரு வகையில் தனித்துவமான சாதனை புரிதல்,  ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதனை செய்தல் போன்ற சாதனைகளை புரிந்த பெண் குழந்தைகள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News