மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்: துரை வைகோ
236 வது வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து துரை வைகோ மரியாதை செலுத்தினார்
மதிமுக சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ சிலைக்கு மாலை அணிவித்கு துரை வைகோமரியாதை செலுத்தினர்.
என மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 236 வது பிறந்த நாளையட்டி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மாலை மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக தலைமை நிலைய செயலர் துரை வைகோ மேலும் கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் எங்களை தோற்கடிக்க முடியாது என்கிறார். அவரோ நானோ தீர்மானிக்க முடியாது.மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளோம் .அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்கள் வாங்கி உள்ளோம்.தேர்தல் தள்ளிப்போகலாம் எப்போது வந்தாலும் கூட்டணி தலைமையிடம் பேசி தேர்தலை சந்திப்போம்.
தேசிய பேரிடர் பாதிப்புக்கான 6 மாநிலங்களுக்கு ரூ 3000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.தமிழகத்திற்கு முதல்வர் 6 கோடி நிதி கேட்டுள்ளார் .பல்வேறு மாவட்டங்களில் பேரழிவு நடந்து உள்ளன.இதற்கு மத்திய அரசு முறையாக பதிலளிக்கவில்லை என்றார் துரைவைகோ.
இதில், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் ,மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், அவைத்்தலைவர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜவகர், பொதுக்குழு உறுப்பினர் புலிப்பாண்டி, மாவட்ட விவசாய அணி வேளாங்கண்ணி ,மாவட்ட மகளிர் அமைப்பாளர் பேச்சியம்மாள், ஆலோசனை குழு உறுப்பினர் முனியாண்டி ,ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் தர்மராஜன், ஒன்றிய செயலாளர் மணவாள கண்ணன், ஆகியோர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.