விபத்தில் உயிரிழந்த மருத்துவ பணியாளருக்கு உதவித்தொகை: கூட்டமைப்பு வழங்கல்

விபத்தில் இறந்த ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு மருத்துவ நியமன நேரடி கூட்டமைப்பு நிதிஉதவி;

Update: 2022-03-10 00:30 GMT

விபத்தில் உயிரிழந்த  ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனை மருத்துவ உதவியாளர் இராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளித்த நேரடி நியமன உதவியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் மருத்துவர் நேரடி நியமன உதவியாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  விபத்தில் மரணமடைந்த மருத்துவ உதவியாளர் இராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.1.10000 வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதி ஆலம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார் .இந்நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை நோக்கி வந்த பொழுது எதிர்பாராதவிதமாக நேரிட்ட விபத்தில் பலியானார். இவருடைய ஒற்றை வருமானத்தை வைத்து இவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் உடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் மருத்துவ நேரடி நியமன உதவியாளர கூட்டமைப்பு சார்பில் திரட்டிய ஒரு லட்சத்தி பத்தாயிரம்  நிதியை, நேரடி உதவியாளர் கூட்டமைப்பு தலைவர்  .கலாமோகன், பொதுசெயலாளர், சதீஷ்குமார், பொருளாளர் .பிரபு நாத் ஆகியோர், இயக்குனரக நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் முன்னிலையில் இராமகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு  நிதிஉதவி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News