மத்திய பட்ஜெட்டில் மதுரை -போடி அகல ரயில் பாதை பணிக்கு ரூ 125 கோடி ஒதுக்கீடு

மதுரை முதல் போடி வரை அகல ரயில் பாதை பணிக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

Update: 2022-02-03 16:45 GMT

மதுரை முதல் போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகள்

மத்திய பட்ஜெட்டில் மதுரை முதல் போடி அகல ரயில் பாதை பணிக்கு ரூபாய் 125 கோடி ஒதுக்கீடு. செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு ஏ.கே அகர்வால் மற்றும் கூடுதல் பொது மேலாளர் பி.ஜி. மல்லையா ஆகியோர் வியாழக்கிழமை  இணையதள வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசினர்.

தெற்கு ரயில்வே பாதுகாப்பு பணிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தை விட அதிக அளவாக ரூபாய் 2374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ரயில்பாதை மேம்பாட்டு பணிகளுக்காக ரூபாய் 1470 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இது கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக  89.51 சதவீதம் அதிகமாகும் .

மேலும் கட்டமைப்பு பணிகளை இரட்டை ரயில் பாதை மற்றும் அகல ரயில் பாதை திட்டங்களுக்கு முறையே 283 மற்றும் 73 சதவிகிதம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் நடைபெற்று வரும் ரூபாய் 28. 307 கோடி மதிப்பிலான 25 ரயில்வே திட்டங்களுக்கு அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டன.இந்த நிதி 3077 கிலோமீட்டர் ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும் .இந்த பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ரூபாய்3865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .இது கடந்த 2014ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதியை விட 340 சதவீதம் அதிகம் ஆகும்.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே 17.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவிருக்கும் புதிய ரயில் பாதை பணிக்கு ரூபாய் 55 கோடியும்,மதுரை முதல் போடி நாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தை ரூபாய் 125 கோடியும்,புதிய நவீன பாம்பன் பாலத்தை ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது  ரயில் விகஸ் நிகம் லிமிடெட் மூலமாக நடைபெற்று வரும் ரயில் பாதை பணி களுக்கு ரூபாய் 789 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..தமிழகத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை மின்சார மயமாக்கல் பணிகளுக்கு ரூபாய் 303 புள்ளி 42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினர்.

Tags:    

Similar News