ரேஷன் கடைகளில் தரமற்ற அரசி வழங்க அதிமுக தான் காரணம்: அமைச்சர் மூர்த்தி

நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்க அதிமுக தான் காரணம் என வணிகவரித் துறை, பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி பேட்டி;

Update: 2021-11-24 17:13 GMT

நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி வழங்க அதிமுகவை காரணமென அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி வழங்க அதிமுகவை காரணமென அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்

மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சுமார் 103 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மதுரை சொக்கி குளம் பகுதியில் இருக்கக்கூடிய கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பயனாளிகளுக்கு ஆணையை வழங்கினார் .

அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில், ராஜாக்கூர்.  பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மாநகரப் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை.  மக்களை தேர்வு செய்யப்பட்டு சலுகை விலையில் வீடு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வணிக வரித்துறையில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருப்பவர்கள் நிர்வாக் காரணத்திற்காக மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எந்த பகுதியில் இருந்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இந்த ஆறு மாதத்தில் செய்து வருகிறோம் .

தற்போது வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அமைச்சர் மூர்த்தி. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கொள்முதல் செய்த நெல் தரமற்ற முறையில் இருப்பதன் காரணமாகவே தற்போது வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் வருவதாக கோரினார். இதற்கு முழு காரணம் அதிமுகவின அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News