மதுரையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்

அண்ணா நினைவு தினத்தையொட்டி மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

Update: 2022-02-03 17:15 GMT

மதுரையில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு  நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா  திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பகுதி கழகம் வட்டக் கழகம் பேரூராட்சி கழகம் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News