பணம் வாங்கி வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரை மாஜி மண்டல தலைவர் பகீர்

பணம் வாங்கி கொண்டு வேட்பாளர்களை அறிவித்ததாக செல்லூர் ராஜூ மீது மதுரை அதிமுக முன்னாள் மண்டல தலைவர் பகீர் குற்றச்சாட்டு;

Update: 2022-02-02 08:46 GMT

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புபடம்)

மதுரை மாநகராட்சி வேட்பாளராக அறிவிக்கப்படாததால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் லட்சுமி, பாஜவுக்கு தாவி விட்டார். அதிமுக முன்னாள் மேற்கு மண்டலத்தலைவர் ராஜபாண்டியனுக்கும் சீட் மறுக்கப்பட்டதால் அவர் அமமுகவில் ஐக்கியமானார்

இதுகுறித்து ராஜபாண்டியன் கூறும்போது, கட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக வட்டச்செயலாளராக இருந்து வருகிறேன். 3 முறை மாமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். மண்டலத்தலைவராகவும் இருந்தேன். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உண்மை தொண்டர்களை மதிக்கவில்லை.

தற்போது கட்சியினரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மதுரையில் மேலும் பலர் அதிருப்தியால் அதிமுகவிலிருந்து விலக உள்ளனர். மதுரையில் அதிமுகவை அழிவை நோக்கி செல்லூர் ராஜூ கொண்டு செல்கிறார் என கூறினார்

Tags:    

Similar News