மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 81 வது வயது துவக்கம்
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இன்று 81 -ஆவது வயது தொடங்கியது
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இன்று முதல் 81 ஆண்டு தொடங்கியது.
தென்மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவ குணங்கள் கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனை யானது 81 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாகாண கவர்னர் சர்.ஆர்தர் ஹோப் நவம்பர் 18 1940இல் திறந்துவத்து கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனை கட்ட எஸ்கின் துறை பெருந்தொகை நன்கொடை வழங்கினார். இவரது சந்ததியினர் தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு எர்ஸ்கின் என்று பெயர் சூட்டி நன்றி கடன் செலுத்திய பெற்றோர்கள உண்டு. தென்னகத்தில் எர்ஸ்கின் மருத்துவமனையாக பெயர் வழங்கப்பட்ட அரசு மருத்துவமனை காலப்போக்கில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.குறிப்பிடத்தக்கது. இம் மருத்துவமனையானது 80 வயது முடிவடைந்து 81வது வயதில் அடி எடுத்து வைப்பது என்பதை மதுரை மக்கள் பெருமையுடன் கூறி மகிழ்கின்றனர்.