பணம் ஆக்கல் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் தனியார் வசம் 400 ரயில் நிலையங்கள்

பணம் ஆக்கல் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் 400 ரயில் நிலையங்கள் தனியாரிடம் செல்லும் என்றார் எம்பி சு.வெங்கடேசன்;

Update: 2021-12-21 07:45 GMT

மதுரை பணமாக்கல் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் 400 ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் எவ்வளவு பணம் ஆகும் என தெரியாது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன்  எழுப்பிய  கேள்விக்கு,  ரயில்வே அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு எண்: 1707 பதிலளித்துள்ள ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , நான்கு ஆண்டுகளில் 400 ரயில் நிலையங்கள் தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதனால் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கக்கூடும். மறு மேம்பாடு வாயிலாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இப்போது மதிப்பிட இயலாது என்று பதில் அளித்துள்ளார்.

திட்டத்திற்கு பெயர் பணமாக்கல். ஆனால் எவ்வளவு பணம் ஆகும் என்று தெரியாது. என அமைச்சர் அளித்த  பதில் வியப்பாக இருக்கிறது. ஆனால் இத்திட்டத்தால் லாபம் அடையப் போகும் தனியார்கள் நன்கு அறிவார்கள் எவ்வளவு அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News