தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் ஜூன் 20 முதல் இயக்கப்பட இருக்கின்றன
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தற்போது வெளியூர் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் மேலும் சில சிறப்பு ரயில்கள் ஜூன் 20 முதல் இயக்கப்பட இருக்கின்றன.
அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மற்றும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா சிறப்பு ரயில், மதுரை - புனலூர் சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 20 முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன.
அதை போல கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் எனவும், ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில், மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில், புனலூர் - மதுரை சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 21 முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன எனவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.