மதுரை சித்திரை திருவிழா-சுவாமி,அம்பாள் வீதியில் பவனி

Update: 2021-04-22 04:45 GMT

மதுரை சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்ற மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும், அம்மனுடன் சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும் ஆடிவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் சிம்மவாகனம்,அன்ன வாகனம், தங்க குதிரை வாகனம் என எழுந்தருளி கோவில் ஆடி வீதிகளில் பவனி வந்தனர்.

இந்நிலையில் ஏழாம் நாளான இன்று அம்மனுடன் சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், மீனாட்சிஅம்மன் யாளி வாகனத்திலும் திருவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விஷேச பூஜைகள் செய்யப்பட்டன. கொரோனா பரவல் எதிரொலியாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் நிகழ்ச்சிகளை இணையதளத்தில் மட்டும் பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்து கோவில் இணையதளம் மற்றும் யூ - டியூப்பில் நேரலை செய்யப்பட்டது.

Tags:    

Similar News