கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-01-06 09:15 GMT

திட்டுவிளை பகுதியில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேசன் அரிசி பிடிபட்டது.

தமிழக ரேஷன்கடைகளில் விற்பனை செய்யப்படும் ரேஷன்அரிசிக்கு கேரளாவில் கடும் கிராக்கி இருப்பதால் இந்த அரிசியை சிலர் கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இதனை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து பறக்கும்படை அமைத்து ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் வருவாய்துறை மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகரிலிருந்து மாட்டுத்தீவனம் என்ற பெயரில் தவிடு ஏற்றி வந்த லாரியில் மறைத்து வைத்து 18 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதனை தொடர்ந்து கடத்தல் லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை நாகர்கோவில் கோணத்தில் உள்ள உணவு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: