வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசல்!

டெல்லி அணி சார்பில் பந்து வீசிய கலீல் அகமது 2 ஓவர்களுக்கு 31 ரன்களையும் அக்ஷார் படேல் 2 ஓவர்களுக்கு 24 ரன்களையும் வாரி வழங்கியுள்ளனர். முகேஷ் குமார் மட்டும் ஓரளவுக்கு பரவாயில்லாமல் வீசி வருகிறார்.;

Update: 2023-04-08 10:50 GMT

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 25 பந்துகளிலேயே அரைசதத்தை பூர்த்தி செய்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் பவுலிங்கை பதம் பார்த்து வருகிறார்கள் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் இருவரும்.

கடந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கவுகாத்தியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி 2வது வெற்றியைப் பெறுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஐபிஎல் 2023 தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 10 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் தோல்வியும் மற்றொன்றில் வெற்றியும் பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி. டெல்லி அணி தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

Rajasthan Royals Vs Delhi Capital Toss

ஐபிஎல் 2023 தொடரின் 11 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார்.

ராஜஸ்தான் முதல் பேட்டிங்

ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர்.

கலீல் அகமது முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார் ஜெய்ஸ்வால். அடுத்து 5வது. 6வது பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி மொத்தம் இந்த ஓவரிலிருந்து 20 ரன்களைப் பெற்றது ராஜஸ்தான் அணி.

இரண்டாவது ஓவரை நோர்ஜே வீச, இந்த ஓவரின் 3, 5, 6 வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 12 ரன்களைக் குவித்தார் ஜோஸ் பட்லர். 3வது ஓவரில் முகேஷ் குமார் 7 ரன்களைக் கொடுத்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் மின்னல் வேகத்தில் ரன்களை சேர்த்து வருகிறார்கள். ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் ருத்ரதாண்டவம் ஆட, மறுபுறம் ஜோஸ் பட்லர் தன் பங்குக்கு பந்துகளை விளாசி வருகிறார்.

டெல்லி அணி சார்பில் பந்து வீசிய கலீல் அகமது 2 ஓவர்களுக்கு 31 ரன்களையும் அக்ஷார் படேல் 2 ஓவர்களுக்கு 24 ரன்களையும் வாரி வழங்கியுள்ளனர். முகேஷ் குமார் மட்டும் ஓரளவுக்கு பரவாயில்லாமல் வீசி வருகிறார்.

அணி வீரர்கள் விவரம் | RR vs DC IPL 2023 Playing XI

Rajasthan Royals

Yashasvi Jaiswal, Jos Buttler, SV Samson(C) , R Parag, Shimron Hetmyer,DC Jurel, Ravichandran Ashwin, Jason Holder, Trent Boult, Yuzvendra Chahal, Sandeep Sharma

ராஜஸ்தான் ராயல்ஸ்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், எஸ்வி சாம்சன்(சி) , ஆர் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், டிசி ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா

Delhi Capitals

Abishek Porel(wk), Manish Pandey, Rovman Powell, RR Rossouw, David Warner(C), Lalit Yadav, Axar Patel, KK Ahmed, KL Yadav, Mukesh Kumar, A Nortje

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அபிஷேக் போரல்(வாரம்), மணீஷ் பாண்டே, ரோவ்மேன் பவல், ஆர்ஆர் ரோசோவ், டேவிட் வார்னர்(சி), லலித் யாதவ், அக்சர் படேல், கேகே அகமது, கேஎல் யாதவ், முகேஷ் குமார், ஏ நார்ட்ஜே

Tags:    

Similar News