WTC Final 2023 ஆட்டம் துவங்கும் நேரம்! எந்த சேனலில் பார்க்கலாம்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லுமா? இன்று மோதல்!;

Update: 2023-06-07 04:06 GMT

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இன்று மதியம் துவங்க இருக்கிறது.

ஐசிசி தொடர்களில் டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகும். கடந்த 2019ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அதாவது 2 ஆண்டுகளில் எந்தெந்த அணி டெஸ்ட் போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறதோ அவை தங்களுக்குள் மோதி யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் 2022-23 ஆண்டுக்கான தொடரில் முதலிடத்திலிருக்கும் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணியும் மோதுகின்றன.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைக்காட்சிகளில் இந்த தொடர் ஒளிபரப்பாகும்.

மதியம் 3 மணிக்கு போட்டி துவங்கும் எனவும் மதிய உணவு இடைவேளை 5 மணிக்கு விடப்படும். இது இங்கிலாந்தின் உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணி ஆகும். இதனையடுத்து 7.40 மணிக்கு தேநீர் இடைவேளை விடப்படும். இரவு 10 மணிக்கு முதல் நாள் ஆட்டம் நிறைவடையும். 

Tags:    

Similar News