WC2023 Points Table டாப்பில் தொடரும் இந்தியா!அடுத்தடுத்து யாரு வர்றா?
உலக கோப்பை 2023 தொடரின் புள்ளிப்பட்டியல் இதோ
உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இப்போது நடைபெறும் இந்த தொடருக்கு போதிய வரவேற்பு இல்லை என்பது கண்கூடாவே தெரிகிறது. பெரும்பாலான போட்டிகள் சம்பிரதாய ஆட்டமாகவே நடைபெற்று வருகின்றன.
இதில் இந்திய அணி மட்டும் தோல்வியையே சந்திக்காமல் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி தான் எதிர்த்து விளையாடிய, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 5 அணிகளுக்கு எதிராகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனால் நெட் ரன்ரேட் +1.353 பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி
தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடிய இரண்டாவது அணி தென்னாப்பிரிக்க அணிதான். இந்த அணி ஒரு தோல்வியைப் பெற்றிருந்தாலும் அது துரதிஷ்டவசமான தோல்விதான். அந்த ஆட்டத்திலும் போராடியே தோற்றது. ஆனால் எதிரணி மிகவும் பலம் குறைந்த நெதர்லாந்து அணி. மற்றபடி தான் விளையாடிய ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் அணிகளுடன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் குவித்த தென்னாப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 311 ரன்கள் குவித்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 399 ரன்களும், வங்க தேசத்துக்கு எதிராக 382 ரன்களும் எடுத்து சாதனை படைத்திருந்தது. இதிலிருந்து முதல் பேட்டிங் செய்தால் தென்னாப்ரிக்க அணியின் வெற்றியைத் தவிர்க்கமுடியாது என்பதை அறியலாம்.
8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், ரன்ரேட் +2.370 வைத்திருப்பதால் நிச்சயம் இந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை முறையே நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பிடித்துள்ளன.
நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் +1.481 ரன்ரேட்டைப் பெற்றுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
5வது மற்றும் 6வது இடங்களில் முறையே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன. கடைசி 4 இடங்களில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில், நெதர்லாந்து 7 வது இடத்திலும், இலங்கை 8 வது இடத்திலும் , இங்கிலாந்து 9 வது இடத்திலும், வங்கதேசம் 10 வது இடத்திலும் இருக்கின்றன.