அரை இறுதிக்கு தகுதி பெறுமா? பாகிஸ்தானின் தலை எழுத்து நாளை தெரியும்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்கிற பாகிஸ்தானின் தலை எழுத்து நாளை தெரியும்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா? என்பது நாளை தெரியும்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியானது டெல்லி, பெங்களூரு, லக்னோ, சென்னை, மும்பை , தர்மசாலா, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ,ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உட்பட மொத்தம் பத்து அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன, இந்திய அணியானது இதுவரை சந்தித்த 8 போட்டிகளில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லீக் போட்டியில் இறுதியாக இந்திய அணியானது நவம்பர் 12ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் மோத இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் இந்தியா அரையிறுதி போட்டிக்கு ஏற்கனவே முன்னேறி உள்ளதால் பிரச்சனை இல்லை. அதை போல் தென் ஆப்பிரிக்கா அணியும் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
இந்த நிலையில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் முன்னாள் உலக கோப்பை சாம்பியன் இலங்கையை நியூசிலாந்து அணி எளிதாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ள நியூசிலாந்து அணி கிட்டத்தட்ட அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது என்றே கூற வேண்டும்.
ஆனால் அரை இறுதிக்குள் நுழைவதற்கான தகுதி பட்டியலில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் 10 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இதில் குறிப்பாக பாகிஸ்தான் அணியானது நாளை நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை சந்திக்க இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அரை இறுதிக்குள் நுழையும் தகுதியை பெறும். எனவே நாளை நடைபெற உள்ள லீக் போட்டியானது பாகிஸ்தானுக்கு அதன் தலை எழுத்தை நிர்ணயிக்க கூடியதாக அமைந்துள்ளது.