25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் சாதித்த மேற்கிந்திய தீவுகள் அணி

சொந்த மண்ணில் 25 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாதனைப் படைத்துள்ளனர்.;

Update: 2023-12-10 15:48 GMT

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சுற்றுப் பயணம் சென்றுள்ளன. இதில் ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என வென்று அசத்தியுள்ளது.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. 2வது போட்டி இங்கிலாந்து வென்றது. 3வது போட்டியில் முதலில் ஆடிய 40 ஓவர் முடிவில் இங்கிலாந்து 206/9 ரன்கள் எடுத்தது. மழைக் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதிகபட்சமாக பென் டக்கெட் 71, லிவிங்ஸ்டன் 45 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு, அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளையும், ரோமியோ ஷெஃபார்டு 2விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 31.4 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அலிக் அதான்ஸா 45, கீசி கார்டி 50 ரன்களும் இறுதியில் ரோமியோ ஷெஃபார்டு 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

மேத்யூ ஃபோர்டு ஆட்ட நாயகன் விருது பெற சாய் ஹோப் தொடர் நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாதனைப் படைத்துள்ளனர்.

சாம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் தேர்வாகாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த வெற்றி அவர்களுக்கு புத்துணர்வை தருவதாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Tags:    

Similar News