ஐவாஸ் பாரா பேட்மின்டன் போட்டியில் சாதனை படைத்த திருச்சி வீரருக்கு வரவேற்பு
ஐவாஸ் பாரா பேட்மின்டன் போட்டியில் சாதனை படைத்த திருச்சி வீரருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடல் ஊனம் என்பது ஒரு குறை அல்ல. உடல் ஊனமுற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால் அவர்களுக்கான மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறன் படைத்த வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், பேட்மின்டன், நீச்சல் என எல்லா வகை பாரா விளையாட்டு போட்டிகளும் இடம் பெற்றன.
பாட்மின்டன் பிரிவில் 7 -தமிழக வீரர்கள் உட்பட இந்தியா சார்பில் 21 வீரர், வீராங்கனை மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் முதுநிலை பயிற்சியாளர் பத்ரி நாராயணன் , பாரா பேட்மின்டன் பயிற்சியாளர் இர்பான் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் திருச்சியில் இருந்து கார்த்திக் என்பவர் கலந்து கொண்டு 'எஸ் எல் 3 ' , 'எஸ்எல் 4 ' இரட்டையர் பிரிவுகளில் வெண்கலம் வென்றார்.
வெண்கலம் வென்ற கார்த்திக்கிற்கு திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 7.00 மணிக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்கப்பட்டது.
இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , நிர்வாகி ஆர்.கே.ராஜா, பயிற்சியாளர் கவின் பக்கிரிசாமி, பிரவீன், சீனிவாசன், சிந்து, மது மற்றும் பேராசிரியர் கி.சதீஸ்குமார், குடும்ப நண்பர்கள் பலர் கலந்துக் கொண்டு ஸ்ரீரங்கம் பாட்மின்டன் வீரர் கார்த்திக் பாராட்டி, வாழ்த்தி பொன்னாடை போர்த்தினார்கள்.