விராட் கோலியின் பிரமாண்ட சிலை: இணையத்தில் வைரல்
விராட் கோலியின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்ட விளம்பரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.;
உலகளவில் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் இந்திய கிரிக்கெட் வீரருமான விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 32 போட்டிகளில் விளையாடி 129.78 ஸ்டிரைக் ரேட்டில் 40 அரை சதம் உள்ளிட்ட 1,207 ரன்களை குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 63.52 ஆகும். மேலும் 2014 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் குவிப்பு: 50 ஓவர் உலகக்கோப்பையில் 37 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 88.20 ஸ்டிரைக் ரேட்டில் 1795 ரன்களை எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 59.83 ஆகும். 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, உலகக்கோப்பையில் டி20 மற்றும் 50 ஓவர் என இரண்டிலும் 67 இன்னிங்ஸ்களில் 61.26 சராசரியுடன் 5 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 3,002 ரன்களைக் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். விராட் கோலியின் சாதனையை விராட் கோலியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை 2024 க்கு முன்னதாக, விராட் கோலியின் பெயர் மேற்கிந்தியத் தீவுகளுடன் போட்டியை இணை நடத்தும் அமெரிக்காவில் நிறைய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. விராட் கோலி ஒரு உலகளாவிய கிரிக்கெட் ஐகான் என்பதால், அமெரிக்காவில் மதிப்புமிக்க போட்டிக்கான உற்சாகத்தை அதிகரிப்பதற்காக அவரது பெயர் பல விளம்பர பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், விராட் கோலியின் லைஃப்ஸி சிலை அமெரிக்காவின் தலைநகரில் உள்ள பரபரப்பான சின்னமான டைம்ஸ் சதுக்கத்தின் நடுவில் தனது பேட்டை உயர்த்தியபடி நிற்பதை காட்டும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் டிரெண்டிகை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலியுடன் பிராண்ட் அம்பாசிடராக இணைந்துள்ள மெத்தை நிறுவனத்தின் விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த பிரம்மாண்ட சிலை உள்ளது. தரமான தூக்கத்தை கோலி அங்கீகரித்ததன் அடையாளமாக, அவர்களின் மெத்தைகளால் வழங்கப்பட்ட ஆறுதலை முன்னிலைப்படுத்த இந்த சிலை அமைக்கப்பட்டது. இதே வீடியோவை சமூக வலைதளத்தில் மெத்தை நிறுவனம் பகிர்ந்துள்ளது வைரலாகியுள்ளது.
மேலும் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் அவரது சிலையைக் காட்டிய வீடியோவைக் கண்டதும், அவரது ரசிகர்கள் பலர் சற்று குழப்பமடைந்தனர். பின்னர் ஒரு மெத்தை நிறுவனத்தின் விளம்பர வீடியோ என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை உண்மையானதா இல்லையா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள விராட் கோலி சிலை உண்மையானது அல்ல. அதற்கு பதிலாக, இது கணினி உருவாக்கிய படங்கள் (CGI) என்பது ரசிகர்களிடையே புரிய ஆரம்பித்தது.